கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கில், அடையாளம் தெரியாத சடலங்கள் பதப்படுத்தி வைக்க, கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்டச் செயலாளர் கே.வி.எஸ் சீனிவாசன் தலைமை வகித்தார்.
இதுதொடர்பாக சென்னை மருத்துவ சேவைகள் கூடுதல் இயக்குநர் கூறுகையில், "கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விபத்துகள், இயற்கையாக உயிரிழக்கும் ஆதரவற்ற மற்றும் பெயர், விலாசம் தெரியாத சடலங்கள், கிருஷ்ணகிரி பிரேத கிடங்கில் வைக்கப்படுகிறது.
'மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்படும் பாஜக!' - குற்றஞ்சாட்டும் சமூக செயற்பாட்டாளர்கள்
இதற்காகக் குளிர்சாதனப் பெட்டிகள் வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், தற்போது இரண்டு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கியுள்ளனர். இது மருத்துவமனைக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.