தூய்மையின் உதாரணமாகத் திகழும் ஊராட்சி மன்றத் தலைவர்.! - அனைத்து வீடுகளுக்கும் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து தூய்மைப்படுத்தும் ஊராட்சி மன்றத்தலைவர்
கிருஷ்ணகிரி : கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொடுத்து, அனைத்து வீடுகளுக்கும் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து தூய்மைப்படுத்தும் ஊராட்சி மன்றத் தலைவர்.
கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளபள்ளி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் அம்சவேணி . கரோனா வைரஸ் நோய்தொற்று அறிவிப்பு வந்த நாள் முதலே தனது பஞ்சாயத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுமக்கள் சுத்தம், சுகாதாரத்துடன் இருக்கவும் கைகளை தொடர் இடைவெளியில் சோப்பு போட்டு கழுவவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் பெத்ததாளபள்ளி பஞ்சாயத்தில் உள்ள ஜாகிர் நாற்றம்பாளையம் கிராம மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தன் சொந்த செலவிலேயே வரவழைத்து பஞ்சாயத்து முழுவதும் வழங்கி வருகிறார்.
மேலும் நோய் தொற்று பரவாமலிருக்க பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து தாளபள்ளி, காமராஜர்நகர், ஜாகிர் நாற்றம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் இதனை அக்கிராம மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர்.
TAGGED:
SANITATION