ETV Bharat / state

ஓடாத பேருந்துகளுக்கு ஒரு லட்சம் வரியா?அரசை கண்டித்த தனியார் பள்ளிகள் சங்கம் - school bus tax

கிருஷ்ணகிரி: பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், ஓடாத பள்ளிப் பேருந்துகளுக்கு ஒரு லட்சம் ரூபாய்வரை வரி செலுத்த தமிழ்நாடு அரசு கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி சங்கம் தெரிவித்துள்ளது.

DEMONSTRATION  கிருஷ்ணகிரி செ்யதிகள்  தமிழ்நாடு நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி  பள்ளிப் பேருந்துகளுக்கு வரி  school bus tax  krishnagiri news
ஓடாத பேருந்துகளுக்கு ஒரு லட்சம் வரியா?அரசைக் கண்டித்த தனியார் பள்ளிகள் சங்கம்
author img

By

Published : Jul 15, 2020, 8:22 AM IST

கரோனா ஊரடங்கால் பொதுப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் கைகளில் பணப்புழக்கம் இல்லாததால் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த இக்கட்டான காலத்தில் மின்சாரக் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு சமானிய மக்களின் மீது இடியாக இறங்கியது. தற்போது, கூடுதலாக வாகனங்களுக்கு சாலைவரி செலுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் சாலைகளைப் பயன்படுத்தாத சூழ்நிலையில் சாலைவரி கட்ட கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவரும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியைக் கண்டித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், தனியார் பள்ளி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 4 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு சுமார் 50 ஆயிரம் பள்ளிப் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு கரோனா பேரிடர் காலமாக அறிவித்த செப்டம்பர் மாதம் இறுதிவரையில் பள்ளிப் பேருந்துகளுக்கு வரி செலுத்துவதில் விதி விலக்கு அளித்துள்ளது. ஆனால், மத்திய அரசு அறிவித்த விதிவிலக்கைப் பின்பற்றாமல் 50 ஆயிரம் பள்ளிப் பேருந்துகளுக்கு சாலை வரி, இருக்கை வரி, ஆயுள் காப்பீடு, சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த வேண்டும், பேருந்துகளுக்கு எப். சி காண்பிக்கவேண்டும் என தமிழ்நாட்டு அரசு கட்டாயப் படுத்திவருகிறது.

ஏற்கனவே பள்ளிகள் திறக்காததால் ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநருக்கு ஊதியம் வழங்கி வரும்நிலையில் ஓடாத பேருந்துகளுக்கு (ஒரு பேருந்துக்கு) சுமார் ஒரு லட்சம் வரையில் கட்டணங்களைச் செலுத்த அரசு கட்டாயப்டுத்தி வருகிறது. இதைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளோம். மத்திய அரசு அறிவித்துள்ள அறிவிப்பின்படி பள்ளிப் பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு விதி விலக்கை வழங்கவேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு புதிய நிர்வாக இயக்குநர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.