கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பாதுகாவலராக பணியாற்றியவர் காவலர் அன்பரசன். இன்று இவர் நீதிமன்ற வளாகத்தில் ரத்தவெள்ளத்தில் சடலமாக காணப்பட்டார்.
இந்த தகவலறிந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.