ETV Bharat / state

போக்குவரத்து நெரிசல், காற்று மாசு குறித்து ஜி.கே. மணி பேச்சு! - கிருஷ்ணகிரி மாவட்ட போக்குவரத்து நெரிசல் குறித்து ஜி.கே. மணி பேச்சு

கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், காற்று மாசு குறித்து, ஒருங்கிணைந்த பாமக மாவட்ட பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சித் தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

G K Mani speaks about Krishnagiri Traffic issue
author img

By

Published : Nov 13, 2019, 11:15 AM IST

Updated : Nov 13, 2019, 11:32 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பாமக மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணியின் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிருஷ்ணகிரி மாவட்டமானது கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகியவற்றின் முக்கிய தேசிய நெடுஞ்சாலை எல்லையில் அமைந்துள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றார். குறிப்பாக கிருஷ்ணகிரி-பெங்களூரு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று கூறிய அவர், இதற்கு எட்டு வழிச் சாலை அமைக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், காவிரியிலிருந்து விடப்படும் தண்ணீர் ஒரு பகுதிக்கு மட்டும் செல்கிறது. இதனை மற்ற பகுதிக்கும் செல்லும் வகையில் கால்வாய் அமைத்து, விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த மக்களின் எண்ணம் தற்போது மாறியுள்ளதாகக் கூறிய ஜி.கே. மணி அதிமுக கூட்டணி நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது என்றும் கூறினார். மக்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளதை வரவேற்று, வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.

ஜி.கே. மணி செய்தியாளர் சந்திப்பு

காற்று மாசு:

காற்று மாசு குறித்து பேசிய ஜி.கே. மணி, முக்கிய நகரங்களில் காற்று மாசு அதிகரிப்பது, கவலை அடைய செய்வதாகக் கூறினார். மத்திய மாநில அரசுகள் இணைந்து காற்று மாசு அடைவதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தொழிற்சாலைகள், வாகன புகைகளை கண்காணித்து, மாசு ஏற்படுவதைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற அவர், கிருஷ்ணகிரி வழியாக, ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: குடும்பத் தகராறில் பெண் தீக்குளிப்பு - கணவர் கைது!

Intro:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மத்திய மாநில அரசுகள் இணைந்து காற்று மாசு ஏற்படுவதை உடனடியாக தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - ஒருங்கிணைந்த பாமக மாவட்ட பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய பின் அக் கட்சியின் தலைவர் ஜி கே மணி செய்தியாளர்களிடம் தகவல்Body:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மத்திய மாநில அரசுகள் இணைந்து காற்று மாசு ஏற்படுவதை உடனடியாக தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - ஒருங்கிணைந்த பாமக மாவட்ட பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய பின் அக் கட்சியின் தலைவர் ஜி கே மணி செய்தியாளர்களிடம் தகவல்

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த பாமக மாவட்ட பொதுக் குழு கூட்டம் அக் கட்சியின் தலைவர் ஜி கே மணி தலைமையில் இன்று மாலை கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா, ஆந்திரா புதுச்சேரி, முக்கிய தேசிய நெடுஞ்சாலை எல்லையில் அமைந்துள்ளது. போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி பெங்களூரு செல்லும் சாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு எட்டு வழி சாலை அமைக்க வேண்டும். காவிரியில் இருந்து விடப்படும் தண்ணீர் ஒரு பகுதிக்கு மட்டும் செல்கிறது. இதனை மற்ற பகுதிக்கும் செல்லும் வகையில் கால்வாய் அமைத்து, விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்த மக்களின் எண்ணம் தற்போது மாறி உள்ளது. குறிப்பாக அதிமுக கூட்டணி நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. அதனை மக்கள் இந்த கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ள தை வரவேற்று, வரும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடரும். அமோக வெற்றி கூட்டணியாக மாறும். இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் பாமக முன்னெடுக்கும். முக்கிய நகரங்களில் காற்று மாசு என்பது அதிகரிப்பது, கவலை அடைய செய்கிறது. மத்திய மாநில அரசுகள் இணைந்து காற்று மாசு அடைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகள், வாகன புகைகளை கண்காணித்து, மாசு ஏற்படுவதை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முக்கிய பிரச்சினையாகும் நீண்ட நாளாக கிருஷ்ணகிரி வழியாக, ரயில் பாதை அமைக்க வேண்டும், தண்ணீர் பாசனம் உள்ள பகுதிகளில் இருந்து, வறட்சி பகுதிகளுக்கு கால்வாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.Conclusion:
Last Updated : Nov 13, 2019, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.