ETV Bharat / state

'ஸ்டாலின் பேச்சை மக்கள் மறக்க மாட்டார்கள்' - இல.கணேசன் - கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி: திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சை மக்கள் மறக்க மாட்டார்கள் என பாஜக முன்னாள் தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

l ganesan
இல.கணேசன்
author img

By

Published : Jan 17, 2021, 10:56 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாஜக கட்சி அலுவலகத்தை பாஜக முன்னாள் தலைவர் இல.கணேசன் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஸ்டாலின் வேறு ஒரு மதக்கூட்டத்தில் பேசும்போது இந்துக்கள் என்றால் பற்றி எரிகிறது என்று பேசியிருக்கிறார். மக்கள் இதனை மறந்து விடமாட்டார்கள். ஸ்டாலின் தான் இந்துக்களுக்கு எதிரிகள் அல்ல என்று சொல்லியதை வரவேற்கிறேன்.

அவரது பேச்சால் மக்கள் ஏமாறமாட்டார்கள். பாஜக மற்றும் இந்து சார்ந்த அமைப்புகள் கொதித்தெழுந்து வருவதால் நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல என்று ஸ்டாலினை பேச வைத்திருக்கிறது. இதில் மகிழ்ச்சி. இனி ஆலயத்திற்கு சென்றால் பொது இடத்திற்கு என்று இருக்கக்கூடிய மரியாதையை கடைப்பிடிக்க வேண்டும்.

சமீபத்திய கருத்துக்கணிப்பில் பிகார் தேர்தலில் நிதிஷ்குமார் ஆட்சி வராது என தெரியவந்தது. கருத்து கணிப்பு என்பது கருத்தை கணித்தது போல சொல்வது. தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கைகள் பொதுமக்களால் பாராட்டப்படுகிறது. பாஜகவும் அதை வரவேற்கிறது; பாராட்டுகிறது.

பாஜக முதல் அணியில் உள்ளது . இரண்டாவது அணி தான் திமுக. முதல் மற்றும் இரண்டாவது அணியில் இடம் கிடைக்காதவர்கள் தான் மூன்றாவது அணி அமைப்பார்கள்” என்றார்.

இதையும் படிங்க:காலில் அறுவை சிகிச்சை - கமல் ஓய்வு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.