தமிழ்நாடு அனைத்து ஓய்வுதியம் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர் உரிமை தின விழா கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அனைத்து ஒய்வூதியர் சங்கத்தின் தலைவர் துரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின்போது, சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி மற்றும் ஓய்வுபெற்ற மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையுடன் ஓய்வூதிய பலன்கள் குறித்து விளக்க உரை ஆற்றினர் .
அதில், ஓய்வு பெறுகின்ற காலங்களில் ஓய்வூதிய பலன்களை நம்பி இருக்கின்றவர்களுக்கு கண்டிப்பாக ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்றும் குறிப்பாக மத்திய, மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து 75 வயதை கடந்த ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களை கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ஓய்வுப் பெற்ற அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்க: மாதம் முதல் தேதியே ஓய்வூதியம் - ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம்