கிருஷ்ணகிரி: ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னும் இடத்தில் இன்று (பிப்.2) எருதுவிடும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்து வரப்பட்டன. ஆனால் இதற்காக முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறி, காவல் துறையினர் அனைவரையும் விரட்டினர்.
இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துறையினர் தடுத்ததால், காவல் துறையினர் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். அதேநேரம் கல்வீச்சு தாக்குதலால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேதமடைந்தது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் கற்களை குவித்த இளைஞர்கள், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் இளைஞர்கள் தாங்களாகவே எருதுவிடும் விழாவை நடத்த முயன்றனர். இதனிடையே எருதுவிடும் விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இருப்பினும் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து செல்லாத இளைஞர்களால் 3 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது கிருஷ்ணகிரி சரக டிஐஜி சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: 6 லட்சம் மோசடி செய்த வட மாநிலத்தவர்களை ஸ்கெட்ச் போட்டு பிடித்த பெரம்பலூர் போலீஸ்!!