கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகர் அருகே உள்ள கண்காடியா பள்ளித்தெருவில், வீடுகளுக்கு முன்பு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், டாடா ஏசி வாடகை வானங்கள், ஆட்டோ, இருசக்கர வாகனம் என 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது நள்ளிரவில் மர்மநபர்கள் உருட்டுக்கட்டை, செங்கல் உள்ளிட்டவற்றைக் கொண்டு வாகனங்களின் கண்ணாடி தாக்கி சேதப்படுத்தி உள்ளனர்.
நள்ளிரவில் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரம் என்பதால் அப்பகுதியில் நிறுத்திய வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ள சம்பவம் ஓசூர் நகரவாசிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்காடியா பள்ளித்தெரு, வாகனங்கள் தாக்கப்பட்ட பகுதியில் சிசிடிவி படக்கருவிகள் பொருத்தப்படவில்லை. இச்சம்பவத்தில் ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி விசாரணை மேற்கொண்டார்.
ஓசூர் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட உள்ள நிலையில், ஓசூர் முழுவதும் பாதுகாப்பு சிசிடிவி படக்கருவிகள் பொருத்தி அதிகளவிலான காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டுமென ஓசூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.