ETV Bharat / state

எருது விடும் விழாவில் எக்காளமிட்டுச் சென்ற காளைகள் - கும்மனூர் மஞ்சு விரட்டு

கிருஷ்ணகிரி: கும்மனூரில் நடைபெற்ற எருது விடும் விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

கும்மனூர் எருது விடும் திருவிழா
கும்மனூர் எருது விடும் திருவிழா
author img

By

Published : Jan 28, 2020, 10:34 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், கும்மனூரில் ஆண்டுதோறும் எருது விடும் விழா நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த எருது விடும் விழாவில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இந்த விழாவில் மருத்துவக்குழுவினரின் பரிசோதனைக்குப் பிறகே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எருது விடும் விழாவைக் காண ஏராளமனோர் வருகை தந்தனர். இந்தப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட பந்தய தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் காளைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கும்மனூரில் நடைபெற்ற எருது விடும் திருவிழா

அதில் முதல் பரிசு 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயமும், இரண்டாம் பரிசு 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயமும், மூன்றாவது பரிசாக 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயமும் என 52 பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனையொட்டி ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க:

தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தும்வரை ஓயமாட்டேன் - பெ மணியரசன்

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனுாரில் 4வது ஆண்டு எருது விடும் திருவிழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு எருது விடும் விழாவை ஊர்கவுண்டர் வீரப்பன், மந்திரி கவுண்டர் கிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.Body:கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனுாரில் 4வது ஆண்டு எருது விடும் திருவிழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு எருது விடும் விழாவை ஊர்கவுண்டர் வீரப்பன், மந்திரி கவுண்டர் கிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இக்கிராமத்தில், இரண்டு பக்கமும் தடுப்பு அமைத்து, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு காளையின் கயிற்றை அவிழ்த்து விட்டனர். அதில் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட துாரத்தைக் கடந்த காளையின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதில் முதல் பரிசு 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயமும், இரண்டாம் பரிசு 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயமும், மூன்றாவது பரிசாக 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நாணயம் என 52 பரிசுகள் வழங்கப்பட்டன.
அதில், செட்டிமாரம்பட்டியைச் சேர்ந்த நந்திதேவர் காளை முதல் பரிசையும், சென்னசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் காளை இரண்டாம் பரிசையும் வென்றன. இதில் பல்வேறு பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட எருதுகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். எருது விடும் விழாவைக் காண சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.   Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.