கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இயங்கிவரும் சுங்கச்சாவடியால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சுங்க வரி கட்டிவிட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் செல்லக்குமார், "கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருக்கும் சுங்கச்சாவடியை மாற்றக்கோரி கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது என்னிடம் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.
அதன்படி, 80 கோடி ரூபாய் மதிப்பில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி சின்னாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்றுவருகின்றன.
இதனால் மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை என்னுடைய தனிப்பட்ட வெற்றியாகப் பார்க்காமல் மக்களின் வெற்றியாகப் பார்க்க வேண்டும். அதனால் எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி சுங்கச்சாவடி மாற்றத்தை நிகழ்த்தவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...கெளசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை: பின்னணி இதுதான்!