கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மதுபான கடை ஊழியர் ராஜா என்பவரை வெட்டி படுகொலை செய்து, 1.50 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலும் உள்ள 152 மதுக்கடைகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி மூடப்பட்டன.
இவற்றில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அரசு மதுபான கிட்டங்கி முன்பாக, பணி பாதுகாப்பு கேட்டும் இறந்த குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு வழங்கிடக் கோரியும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.