கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 15 நாள்களாக விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. இன்று (ஜூலை 29) காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் சாரல் மழையுடன் தொடங்கிய மழை, பின்பு பலத்த மழையாக மாறியது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது.
குறிப்பாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, காவேரிபட்டினம், வேப்பனப்பள்ளி, குருவினாயனப்பள்ளி ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்தது. கடந்த சில தினங்களாக கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்வதால் ஏரி, குளம், குட்டைகளில் நிரம்பியுள்ளன.
இதையும் படிங்க: தலைநகரை குளிர்வித்த மழை!