கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சுமை தூக்குவோர், ஆட்டோ ஓட்டுநர்கள், சவர தொழிலாளர்கள் உள்ளிட்ட 3,237 நபர்களின் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் (ஏப்ரல் 18) தொடங்கி இரண்டு நாள்களாக நடைபெற்றது. அதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் கே.பி. முனுசாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அவர்களுக்கு 10 கிலோ அரிசி, உருளைக் கிழங்கு, வெங்காயம், மஞ்சள் துாள், மிளகாய்த்துாள், சார்பார் பொடி, மிளகுப்பொடி, உப்பு என தலா 1,500 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 48 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: வாடகை ஓட்டுநர்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும்!