ETV Bharat / state

நகைகளைப் பறிகொடுத்த பெண்ணின் புகாரை ஏற்க மறுத்து அலைக்கழித்த காவல் துறை! - கிருஷ்ணகிரிப் பெண்ணிடம் நகை கொள்ளை

கிருஷ்ணகிரி: ஓடும் பேருந்தில் பையில் வைத்திருந்த நகைகளைப் பறிகொடுத்தப் பெண்ணின் புகாரை ஏற்காமல் அலைக்கழித்த காவலர்களை ஒரே போன் காலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்கவைத்தார்.

krishnagiri jewelry theft in running bus  கிருஷ்ணகிரி மாவட்டச் செய்திகள்  கிருஷ்ணகிரிப் பெண்ணிடம் நகை கொள்ளை  அந்திவாடி
நகைகளைப் பறிகொடுத்த பெண்
author img

By

Published : Jan 29, 2020, 9:34 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடி பகுதியைச் சேர்ந்தவர் நீலம்மா. இவர் தனது மகளுக்கு மூன்று மாதங்களுகக்கு முன்னதாக திருமணம் செய்துவைத்துள்ளார்.

கடந்த மாதம் நீலம்மாவின் மகள் பிறந்த வீட்டிற்கு வந்தபோது, நகைகள் பத்திரமாக இருக்க வேண்டுமென்பதற்காக நீலம்மா அத்திப்பள்ளியில் வசிக்கும் தனது தங்கையான சந்திரம்மா என்பவரிடம் கொடுத்து பத்திரப்படுத்தியுள்ளார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு தனது மகளை புகுந்த வீட்டிற்கு அனுப்பிவைக்க வேண்டுமென தனது தங்கையிடம் வழங்கிய நகைகளைக் கொண்டுவருமாறு கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியிலிருந்து சந்திரம்மா தங்கநகைகளை பையில் வைத்து அந்திவாடிக்கு தனியார் பேருந்தில் வந்துள்ளார்.

நகைகளைப் பறிகொடுத்த பெண்

அவ்வாறு வந்துகொண்டிருந்தபோது அவரது பையிலிருந்து தங்கநகைகளைக் கொள்ளையர்கள் அசந்த நேரத்தில் கொள்ளையடித்துள்ளனர். பையில் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். பின்னர், அந்திவாடியில் இறங்கிய சந்திரம்மா தங்கநகைகள் காணாமல்போனதாக ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.

நகர காவலர்கள் மத்திகிரி காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு கூறி அவரை அனுப்பியுள்ளனர். மத்திகிரி காவலர்கள் ஓசூர் நகர காவல் நிலையத்திற்கு அனுப்பிவைக்க மீண்டும் ஓசூர் காவலர்கள் மத்திகிரி காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியடைந்த சந்திரம்மா மனம் உடைந்த நிலையில் கதறி அழுததைப் பார்த்து பொதுமக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொலைபேசி மூலமாகத் தகவல் தெரிவித்துள்ளனர். இதன்பின்னர் அவரின் உத்தரவின்படி ஓசூர் நகர காவலர்கள் புகாரைப் பெற்றுள்ளனர்.

ஓடும் பேருந்தில் நகைகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தால் நிலைகுலைந்துபோன சந்திரம்மா மனம் உடைந்த அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் உலுக்கியது.

இதையும் படிங்க: திருமணமான 8 மாதங்களில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை.!

Intro:ஓசூர் அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் மூன்று லட்சம் மதிப்பிலான தங்கநகைகள் கொள்ளை: பாதிக்கப்பட்டவரின் புகாரை பெறாமல் காவல் நிலையங்களுக்கு அலைகழிக்க வைத்த போலிசார்.Body:ஓசூர் அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் மூன்று லட்சம் மதிப்பிலான தங்கநகைகள் கொள்ளை: பாதிக்கப்பட்டவரின் புகாரை பெறாமல் காவல் நிலையங்களுக்கு அலைகழிக்க வைத்த போலிசார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடி பகுதியை சேர்ந்த நீலம்மா, தனது மகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்திருந்த நிலையில்,

கடந்த மாதம் நீலம்மாவின் மகள் பிறந்த வீட்டிற்கு வந்தபோது நகைகள் பத்திரமாக இருக்க வேண்டுமென்பதற்காக நீலம்மா அத்திப்பள்ளியில் வசிக்கும் தனது தங்கையான சந்திரம்மா என்பவரிடம் கொடுத்து பத்திரப்படுத்தி உள்ளார்.

நீலம்மா ஒரு மாதத்திற்கு பின்பாக தனது மகளை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென தனது தங்கையிடம் வழங்கிய தங்கநகைகளை கொண்டுவருமாறு கூறி உள்ளார்.

கர்நாடக மாநிலம்
அத்திப்பள்ளியிலிருந்து சந்திரம்மா தங்கநகைகளை பையில் வைத்தவாறு அந்திவாடியை நோக்கி தனியார் பேருந்தில் வந்துள்ளார், பேருந்து அந்திவாடி வருவதற்குள்ளாக நோட்டமிட்ட கொள்ளையர்கள் தங்கநகைகளை அசந்த நேரத்தில் கொள்ளையடித்துள்ளனர் பையில் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார்.

அந்திவாடியில் இறங்கிய சந்திரம்மா தங்கநகைகள் காணாமல் போனதாக ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார், நகர போலிஸார் மத்திகிரி போலிசில் புகாரளிக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

மத்திகிரி போலிஸாரும் மீண்டும் ஓசூர் நகர காவல்நிலையத்திற்கு அனுப்பி வைக்க, மீண்டும் ஓசூர் போலிஸார் மத்திகிரி காவல் நிலையத்திற்கு செல்லுமாறு சொன்னதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியடைந்த சந்திரம்மா மனம் உடைந்த நிலையில் கதறி அழுததை பார்த்து பொதுமக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்க அவரின் உத்தரவின்படி ஒசூர் நகர போலிசார் புகாரை பெற்றுள்ளனர்.
ஓடும் பேருந்தில் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தால் நிலைகுழைந்துபோன சந்திரம்மா, போலிசார் அலட்சியத்துடன் அலைகழித்தது வேதனையின் உச்சம்.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி, அலட்சியமாக நடந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, சந்திரம்மா பறிகொடுத்த நகைகளை மீட்டு தர உத்தரவிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.