ETV Bharat / state

கிருஷ்ணகிரி - கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் கழிவுநீர் போல் செல்வதால் விவசாயிகள் வேதனை! - black water

ஓசூர், கெலவரப்பள்ளி அணையின் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டதால், கருநிறத்தில் செல்லும் தொழிற்சாலை கழிவு நீரால் ஆற்றங்கரையோர விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

krishnagiri-farmers-are-suffering-due-to-the-black-color-water-of-kelavarapalli-dam
கிருஷ்ணகிரி :கெலவரப்பள்ளி அணையின் கருநிறத்தில் செல்லும் கழிவுநீரல் விவசாயிகள் வேதனை.
author img

By

Published : Jul 6, 2023, 6:37 PM IST

கிருஷ்ணகிரி - கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் கழிவுநீர் போல் செல்வதால் விவசாயிகள் வேதனை!

கிருஷ்ணகிரி: கர்நாடகா மாநிலம், நந்தி துர்க்கத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் வழியாக கடலில் சென்று கலக்கிறது. இந்த ஆறு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு முதலில் வந்து, பின்னர் கிருஷ்ணகிரி அணை வழியாக பிற மாவட்டங்களுக்குச் செல்கிறது.

மாவட்டத்தின் முக்கிய ஆறான இந்த ஆற்று நிரை நம்பி பல ஆயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் கெலவரப்பள்ளி அணையின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், ரூ.26 கோடி மதிப்பீட்டில் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் மதகுகள் மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் அணையின் நீர் முழுமையாக தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

அந்த வகையில் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக விநாடிக்கு 1,280 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் அணைப் பகுதியில் வெள்ளை பனி போர்த்தியது போல ரசாயன நுரைகள் குவியல் குவியலாக செல்கிறது. இதை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்.

மழைக்காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைக் கழிவுகள் திறக்கப்படும்போது தான் இதுபோன்ற ரசாயன கழிவுநீர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும். மேலும் அணையில் உள்ள நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுவதால் தொழிற்சாலைக் கழிவுகளுடன் கரு நிறத்தில் நீர் வெளியேறி வருகிறது.

ஓசூர் அடுத்த பாத்தகோட்டா, கனுசூர், பேட்டிகானப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் தென்பெண்ணை நீரை கொண்டுதான் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது மோட்டார் மூலம் நீர் பாய்ச்சும்போது துர்நாற்றத்துடன் கருநிறத்தில் நுரைப்பொங்கும் நீரை பாசனத்திற்கு பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ''அணைப் பராமரிப்பு பணிகள் குறித்தும், நீர் வெளியேற்றம் குறித்தும் முன்கூட்டியே அறிவித்திருந்தால் மாற்று விவசாயத்திற்கு தயாராகி இருப்போம். ஆனால், புதினா, தக்காளி உள்ளிட்டவை தற்போது அதிக விலைக்கு விற்பனையாகும் நிலையில் துர்நாற்ற நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் பயிர்கள் கருகும் அபாயமும், நிலம் மாசடையும் சூழல் ஏற்பட்டுள்ளது'' என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் அணையின் நீரால் விவசாயத்திற்கு பாதிப்பு இல்லையா என்பதை அதிகாரிகள் விளக்கிட கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைய்யும் படிங்க :செய்தியாளர்களை அவமதித்த நாம் தமிழர் கட்சியினர்; சீமானை புறக்கணித்த செய்தியாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.