கிருஷ்ணகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் இதுகுறித்து கூறும்போது, 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் படி, சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ரூ. 7.55 கோடி மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக' அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் உமாசங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: மின்மாற்றியில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி.!!