மும்பையில் தனியார் வாட்ச் கம்பெனியில் பணிபுரிந்த மூன்று பேர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒட்டியுள்ள தமிழ்நாடு - கர்நாடக எல்லை அருகே காரில் கடந்த 2 ஆம் தேதி வந்தனர்.
அப்போது, அவர்களை தமிழ்நாடு எல்லைக் கட்டுப்பாட்டு கரோனா மருத்துவக் குழுவினர் தடுத்து தனிமைப்படுத்தி அவர்களின் சளி மாதிரிகளை ஓசூரில் உள்ள மத்திய அரசின் துணை ஆராய்ச்சி மையத்தில் பரிசோதனைக்கு அனுப்பி இருந்தனர்.
இன்று காலை ஆய்வு முடிவுகள் வெளியான நிலையில் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஒருவருக்கும் அறிகுறி இல்லாத கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து மருத்துவக் நலப்பணிகள் துணை இயக்குநர் கூறுகையில், "இவர்கள் இருவரும் வெளி மாநிலத்திலிருந்து நோய் தொற்றைக் கொண்டு வந்ததால் "கொண்டுவரப்பட்ட நோயாளி"களாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர்கள் இருவருக்கும் முறையே 33, 27 வயது ஆகும்.
முதல்கட்டமாக மாவட்ட மருத்துவ நிர்வாகம் அறிவித்தாலும் முழுமையான விவரங்களை இன்று மாநில மருந்துவ நிர்வாகம் சென்னையிலிருந்து அறிவிக்கும். மாநில நிர்வாகம் அறிவித்த பிறகு கரோனா நோய்த்தொற்றாளிகள் அட்டவணைப் பட்டியலில் இடம்பெறும்"எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆடு மேய்த்ததில் தகராறு: இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு