கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்தம் அக்ரஹாரா கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி வீட்டுமனை பகுதியில் உள்ள புதரில் பிறந்து இரண்டே நாட்களான பச்சிளம் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் யாரோ வீசி சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அங்கிருந்த குழந்தையை அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் புதரில் சென்று பச்சிளம் குழந்தையை கடித்து தின்றுள்ளது.
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது பச்சிளம் குழந்தையின் பாதி உடல் தின்று முடிந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, அங்கிருந்த நாய்களை விரட்டிய பிறகு இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த சிப்காட் காவல் துறையினர் பாதி தின்ற நிலையில் புதரிலிருந்த குழந்தை உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக ஓசூர் அரசு மதத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த குழந்தையை வீசி சென்றது யார் என்று, குழந்தை இறந்த பிறகு வீசப்பட்டதா அல்லது உயிருடன் இருக்கும்போதே வீசிப்பட்டதா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்க: மனைவியின் திருமணத்தை மீறிய உறவு - கணவனுக்கு நேர்ந்த சோகம்