கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்கு உள்பட்ட சின்னபுலிவரிசை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உக்கிரகாளியம்மன் திருக்கோயில் மாசி மாத திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாக, தீய சத்திகள் நீங்க மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தின்போது கிராம மக்கள் நலம் பெறவும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகள் விலகவேண்டியும் ஒரு டன் மிளகாய் வத்தல் கொண்டு உக்கிர காளியம்மனுக்கு யாகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து மயான கொள்ளை விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்துகொண்டு, காளியம்மன் வேடம் உள்ளிட்ட பல்வேறு கிராம தெய்வங்களின் வேடமணிந்து, அம்மனை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
வருகின்ற 26ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில், காளி வேடம், புள்ளபாவு ஊர்வலம், பூங்கரகம், அக்னி குண்டம் இறங்குதல், அம்மனுக்கு திருக்கல்யாணத்துடன் அம்மன் நகர்வலமும் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: 'வல்லாளகண்டனை வதம் செய்த காளி' - ஆக்ரோஷ நடனம்