ETV Bharat / state

கரோனா பாதிப்பு: வெளியில் நடமாடுவோர் குறித்து தகவல் தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு! - கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரபாகர்

கிருஷ்ணகிரி: கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடுவது குறித்து தகவல் தெரிவிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் பிரபாகர்

author img

By

Published : Mar 27, 2020, 6:23 PM IST

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கூறியதாவது, “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வைரஸ் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் 100 அவசரகால படுக்கைகளும் 215 சிகிச்சை படுக்கைகளும், ஓசூரில் 30 அவசரகால படுக்கைகளும் 100 சிகிச்சைக்கான படுக்கைகளும், ஓசூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் 10 அவசரகால படுக்கைகள் 30 சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

தமிழ்நாடு அரசு வழங்கிய ஒரு லட்சம் முகக் கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தனியார் அமைப்பினர் தங்களின் போதிய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். மேலும், பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வீடுகளிலேயே இருக்கவேண்டும். மேலும், தங்களுக்குத் தேவையான அவசர சிகிச்சை தகவலுக்காக மாவட்டத்தில் உள்ள 8 வட்டாட்சியர் அலுவலகங்களில் அவசரகால கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கபட்டுள்ளன. அவசர கால வாகனங்களுக்குத் தேவையான அனுமதி ஆணை இந்த மையங்களைத் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம் அதன் விவரங்கள்,

  • கிருஷ்ணகிரி - 04343-236050
  • பர்கூர் - 04343-266164
  • போச்சம்பள்ளி - 8754284763
  • ஊத்தங்கரை - 04341-220028
  • சூளகிரி - 7825873360
  • ஓசூர் - 9345332624
  • தேன்கனிக்கோட்டை - 04347-235041
  • அஞ்செட்டி - 04347-236411

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்தினர், வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்களின் நடமாட்டம் குறித்தும் வெளி மாவட்டம் மாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வந்துள்ளவர்கள் குறித்த தகவல்களையும் பொதுமக்கள் தெரிவிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் பிரபாகர்

அனைத்து தகவல்களையும் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 1 0 7 7 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:நேரலை: கரோனா சிறப்பு வார்டுகளை திறந்துவைக்கும் முதலமைச்சர் பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.