நாடு முழுவதும் கரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரிய சத்திரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களாக இருக்கும் நரிக்குறவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் பேருந்து நிலையங்களில் ஊசி மணி, பாசி மணி போன்றவை விற்று, தங்கள் பசியைப் போக்கி வந்தனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் கையில் பணம் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஊரடங்கு காரணமாக வெளியில் சென்று சம்பாதிக்க முடியவில்லை. தற்போது கையில் இருந்த பணமும் தீர்ந்ததால் சாப்பாட்டிற்கு வழியில்லை.
நாங்கள் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிறது. எனவே, தமிழ்நாடு அரசானது எங்களுக்கு உணவு வழங்க வேண்டும்' என்று வேதனையாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!