கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இதனால், ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.நேற்று (ஜூன் 04) வினாடிக்கு 240 கனஅடியாக நீர் வரத்து இருந்த நிலையில், கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகள், ஒசூர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இன்று (ஜூன் 05) வினாடிக்கு 400 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளவு 44.28 அடியில், தற்போது 40.34 அடி நீர் இருப்பு உள்ளது . மேலும், அணையிலிருந்து மூன்று மதகுகள் வழியாக 400 கனஅடிநீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடரும் என்பதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
![கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் அதிகரிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03:55:45:1622888745_tn-dpi-01-karnataka-rain-hosur-dam-full-vis-tn10041_05062021153430_0506f_1622887470_754.jpg)