ETV Bharat / state

கரூர் இரட்டைக் கொலை: அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞர் நியமிக்கப்படுமா? - மாதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: கரூர் மாவட்டத்தில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞரை நியமிக்க கோரிய வழக்கினை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்துள்ளது.

Karoor double murder case: Special Case
இரட்டைக் கொலை வழக்கு
author img

By

Published : Jul 9, 2020, 1:59 AM IST

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கீழப்புலியூர் அன்னலட்சுமி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்துள்ளார் .

அதில் , "கரூர் மாவட்டம் முதலைப்பட்டி ஏரி குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்த எனது தந்தை வீரமலை, எனது சகோதரர் நல்லதம்பி ஆகியோரை பட்டப்பகலில் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து ஒரு பொது நல மனுவை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில் தந்தை, மகன் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இதுகுறித்த வழக்கு கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

எதிர்த் தரப்பினர் 200 ஏக்கர் நீர்நிலைகளை ஆக்கிரமித்து அதிக எண்ணிக்கையில், இருப்பதாலும், உயர் நீதிமன்றம் மதுரை கிளை தாமக முன் வந்து பொது நல வழக்காக விசாரித்து கொண்டு இருப்பதாலும் இந்த வழக்கில் உரிய நீதி கிடைக்க சிறப்பு அரசு தரப்பு வழக்குரைஞரை நியமனம் செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் T. சிவஞான சம்பந்தனை அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞராக நியமிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையை வருகிற 10ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: அம்மா கோவிட் கேர் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் - ஜி.ரவீந்திரநாத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.