கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள சென்றாயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. செல்லம்பட்டி காமாட்சிகொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கதிர்வேல். இவரது வீட்டின் அருகேயுள்ள கதிர்வேலின் சகோதரர் சாம்பசிவம் ஆகிய மூவரும் உறவினர்கள்.
நேற்று முன்தினம் இவர்கள் மூவரும் வெளியூர் சென்றுள்ளனர். இதையறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் இவர்கள் மூவரது வீடுகளின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவிலிருந்த சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 71 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ஒரு லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், மூவரும் வெளியூரிலிருந்து இன்று காலை வீடு திரும்பியபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைள், ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்ட அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து மூவரும் நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கைரேக நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளை வைத்து தீவிரமாக விசாராணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் அருகருகேயுள்ள மூன்று கிராமங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெங்களூரு நகை வியாபாரிகளிடமிருந்து கணக்கில் வராத ரூ.21 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்!