ETV Bharat / state

அனைத்து ஏரிகளின் கோடியில் மதகு அமைக்க வேண்டும் - பாசனதாரர்கள் கூட்டத்தில் தீர்மானம்! - அனைத்து ஏரிகளின் கோடியில் மதகு அமைக்க வேண்டும் என பாசனதாரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

கிருஷ்ணகிரி: பாளேகுளி ஏரியிலிருந்து கடைமடை ஏரிவரை அனைத்து ஏரிகளின் கோடியில் மதகு அமைக்க வேண்டும் என பாசனதாரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

irrigators meet
author img

By

Published : Oct 12, 2019, 9:00 AM IST

கிருஷ்ணகிரி அணை உள்கோட்ட அலுவலகத்தில் பாளேகுளி ஏரி முதல் சந்தூர் ஏரிவரை உள்ள கால்வாயின் மூலம் பயன்பெறும் ஏரிகளின் பாசனதாரர்கள் சங்கக் கூட்டம் நடந்தது.

irrigators meet
ஏரிகளின் கோடியில் மதகு அமைக்க வேண்டும் என பாசனதாரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

இந்தக் கூட்டத்தில் பாளேகுளி முதல் சந்தூர்வரை உள்ள 28 ஏரிகளுக்கு முதல் ஏரியிலிருந்து கடைமடை ஏரிவரை அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு ஏரியின் கோடியிலும் மதகு அமைக்க ஊரக வளர்ச்சித் துறை, மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தவும் பாளேகுளி முதல் சந்தூர் ஏரி வாய்க்காலின் சரகத்தில் தொட்டி பாலத்தின் அருகில் 600 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கவும், கவுண்டன் ஏரியிலிருந்து சந்தூர் ஏரிவரை உள்ள 25 ஏரிகளுக்கு ஒரு ஏரிக்கு ஐந்து நாள்கள் வீதம் தண்ணீர் வழங்கவும், பாளேகுளி முதல் சந்தூர்வரை கால்வாய் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க:

தென்பெண்ணையாற்றில் அடித்துச் செல்லப்பட்டவர் மீட்பு!

Intro:பாளேகுளி ஏரியில் இருந்து கடைமடை ஏரி வரை
அனைத்து ஏரிகளின் கோடியில் மதகு அமைக்க வேண்டும்
பாசனதாரர்கள் கூட்டத்தில் தீர்மானம்Body:
பாளேகுளி ஏரியில் இருந்து கடைமடை ஏரி வரை
அனைத்து ஏரிகளின் கோடியில் மதகு அமைக்க வேண்டும்
பாசனதாரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பாளேகுளி ஏரியில் இருந்து கடைமடை ஏரி வரை அனைத்து ஏரிகளின் கோடியில் மதகு அமைக்க வேண்டும் என பாசனதாரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி அணை உட்கோட்ட அலுவலகத்தில் பாளேகுளி ஏரி முதல் சந்தூர் ஏரி வரை உள்ள கால்வாயின் மூலம் பயன்பெறும் ஏரிகளின் பாசனதாரர்கள் சங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமை வகித்தார். பாரூர் உதவி பொறியாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பாளேகுளி முதல் சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளுக்கு முதல் ஏரியில் இருந்து கடைமடை ஏரி வரை அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு ஏரியின் கோடியிலும் மதகு அமைக்க ஊரகவளர்ச்சித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தி கேட்டுக்கொள்வது. பாளேகுளி முதல் சந்தூர் ஏரி வாய்க்காலின் சரகத்தில் தொட்டி பாலத்தின் அருகில் 600 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். இந்த ஆண்டு தற்போது சென்றாயனஅள்ளி ஏரி, அரசமரத்து ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. கவுண்டன் ஏரியிலிருந்து சந்தூர் ஏரி வரை உள்ள 25 ஏரிகளுக்கு ஒரு ஏரிக்கு 5 நாட்கள் வீதம் தண்ணீர் வழங்க வேண்டும். இன்று (10ம் தேதி) முதல் 45 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் விட வேண்டும். பருவமழை பெய்து கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வரும் நிலையில் கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும். பாளேகுளி முதல் சந்தூர் வரை கால்வாய் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்புக்குட்டை ஏரிக்கு செல்லும் கிளை கால்வாயினை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.