கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் 2000 ஏக்கர் பரப்பளவுக்கு அதிகமாக ரோஜா, ஜெர்பரா, கார்னேசன் உள்ளிட்ட கொய்மலர்கள் (கட் ப்ளவர்ஸ்) சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்கள் கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல், காதலர் தினம் உள்ளிட்ட விழா காலங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால், சர்வதேச மலர் விற்பனை சந்தை ஓசூரில் அமைக்க வேண்டும் என அப்பகுதி மலர் விவசாயிகள், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
முதலமைச்சரின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த ஓசூர் மலர் விவசாயிகள்! - மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி: ஓசூரில் சர்வதேச மலர் விற்பனை மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்ததையடுத்து, அப்பகுதி மலர் விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் 2000 ஏக்கர் பரப்பளவுக்கு அதிகமாக ரோஜா, ஜெர்பரா, கார்னேசன் உள்ளிட்ட கொய்மலர்கள் (கட் ப்ளவர்ஸ்) சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்கள் கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல், காதலர் தினம் உள்ளிட்ட விழா காலங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால், சர்வதேச மலர் விற்பனை சந்தை ஓசூரில் அமைக்க வேண்டும் என அப்பகுதி மலர் விவசாயிகள், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஓசூரில் சர்வதேச மலர் விற்பனை ஏல மையம் அமைக்கபடும் : தமிழக முதல்வரின் அறிவிப்பிற்கு ஓசூர் மலர் விவசாயிகள் நன்றி, பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.Body:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சர்வதேச மலர் விற்பனை மையம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பால் ஓசூர் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் ஓசூரில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மலர்களை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் பகுதியில் 2000 ஏக்கர் பரப்பளவுக்கு அதிகமாக ரோஜா, ஜெர்பரா, கார்னேசன் உள்ளிட்ட கொய்மலர்கள் (கட் ப்ளவர்ஸ்) சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்பட்டு மலர்கள் கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல், காதலர் தினம் உள்ளிட்ட முக்கிய விழா காலங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஓசூர் பகுதியில் உள்ள மலர் விவசாயிகள் ஓசூரில் சர்வதேச மலர் விற்பனை சந்தை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் ஓசூரில் சர்வதேச மலர் விற்பனை ஏல மையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பால் ஓசூர் பகுதி மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஓசூர் பேருந்து நிலையத்தில் ஓசூர் பகுதியில் வாழும் மலர் விவசாயிகள் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மலர்களை வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இந்த சர்வதேச விற்பனை மையம் அமைப்பதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி அவர்களுக்கும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும், தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.Conclusion: