ETV Bharat / state

ஒசூரில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம் - The second wave of the corona

கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஒசூரில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

கிருமி நாசினி தெளிக்கும் பணி
கிருமி நாசினி தெளிக்கும் பணி
author img

By

Published : Apr 24, 2021, 6:09 PM IST

நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலையானது வேகமாகப் பரவிவருகிறது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கரோனா பரவலானது அதிகரித்துவருகிறது. எனவே அதனைத் தடுக்க தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகமானது மாவட்டம் முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அதுபோல ஒசூரிலும் கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து பல்வேறு கட்டுப்பாடுகளை அப்பகுதிகளுக்கு விதித்ததோடு, தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது.

மேலும் ஒசூா் மாநகராட்சி நிர்வாகமானது, ஒசூரின் பல்வேறு இடங்களில் ராட்சத இயந்திரங்கள் கொண்டு நகரின் பல்வேறு இடங்களில் உள்ள தெருக்களில் கிருமிநாசினியைத் தெளித்துவருகின்றது. குறிப்பாக ஒசூர் நகரில் இன்று (ஏப்ரல் 24) அரசநட்டி, ஆசிரியர் காலனி, பாரதிநகர், சூர்யாநகர், மூக்கண்டப்பள்ளி, எம்.எம். நகர், லால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் இந்த பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.