ETV Bharat / state

கரோனா: மாநில எல்லைகளில் திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள் - மாநில எல்லைகளில் திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்

கிருஷ்ணகிரி: வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்கள் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

in state boundaries vehicles were Return because of corona prevention

author img

By

Published : Mar 24, 2020, 10:01 PM IST

தமிழ்நாட்டில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள தமிழ்நா - ஆந்திர எல்லைப் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு - ஆந்திரா எல்லையான காளிக்கோவில் சோதனைச் சாவடியில் காவல், வருவாய்த் துறையினர், பறக்கும் படையினர், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் குழு வெளிமாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்களில் கிருமிநாசினி மருந்துகளைத் தெளித்து திருப்பி அனுப்பிவருகின்றனர்.

மாநில எல்லைகளில் திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்

மேலும், வெளி மாநிலத்திலிருந்து வருவோருக்கு காய்ச்சல், ஏதேனும் தொற்று பரவி உள்ளதா என்பதை பரிசோதனை செய்துவருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளின் முகவரி, பிற விவரங்களையும் அலுவலர்கள் சேகரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை பின்பற்றவில்லை எனில் ஓராண்டு சிறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.