ETV Bharat / state

மனைவியின் கழுத்தறுத்துக் கொலைசெய்த கணவன் கைது

கிருஷ்ணகிரி: குடும்பத் தகராறில் கத்தியால் மனைவியின் கழுத்தறுத்துக் கொலைசெய்த கணவனைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

Husband kills his wife in krishnagiri
Husband kills his wife in krishnagiri
author img

By

Published : Feb 11, 2020, 12:58 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கோஜிகொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாடராஜன் (39). கார் டிரைவரான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த பிரியா (35) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு பெங்களூருவில் வாழ்ந்துவந்தார். இவர்களுக்கு நான்கு வயதில் கோயல் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவிலிருந்து வந்து கங்கோஜிகொத்தூரிலுள்ள நடராஜனின் தாயார் வீட்டில் வசித்துவந்தனர்.

சில நாள்களாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும் அதனால் கடந்த வாரம் பிரியா நடராஜனுடன் கோபித்துக்கொண்டு ஓசூர் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த பின்னர் பிரியாவுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நடராஜன், பிரியாவை அருகில் இருந்த கத்தியைக் கொண்டு கழுத்தை அறுத்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே பிரியா இறந்துள்ளார்.

மனைவியைக் கொலைசெய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல நடராஜன் இருந்துள்ளார். இதனைக் கண்டு சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர், நடராஜனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நடராஜன் மனைவியைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பிரியாவின் உடலைக் கைப்பற்றி நடராஜனைக் கைதுசெய்தனர். மேலும் பிரியாவின் உடலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: நிலைமை மோசமாவதற்குள் இந்தியர்களைக் காப்பாற்றுங்கள் - ஜப்பான் கப்பலிலிருந்து தமிழர் கோரிக்கை!

Intro:வேப்பனப்பள்ளி அருகே குடும்ப தகாறரில் கழுத்து அறுத்து மனைவி கொலை.Body:வேப்பனப்பள்ளி அருகே குடும்ப தகாறரில் கழுத்து அறுத்து மனைவி கொலை.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கோஜிகொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாடராஜன் 39. இவர் கார் டிரைவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த பிரியா 35 எனபவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஓசூர் மற்றும் பெங்களூ வில் வாழந்து வந்தனர். இவர்காளுக்குவாழ்ந்து வந்த்னர்.இவர்களுக்கு 4 வயது கோயல் என்ற குழ்ந்தை உள்ளது.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு நடராஜன் அம்மா விடான கங்கோஜிகொத்தூருக்கு மனைவி உடன் வந்து வாழந்து வந்தனர். இநிலையில் மனைவி பிரியா ஓசூரில் உள்ள தனியார் மருத்தவமனையில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் சில நாட்களாக கணவர் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் அவர் நடராஜனுடன் கோபித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கணவர் பிரியாவை சமதானம் செய்ய அழைத்துள்ளார். இதையடுத்து பிரியா விட்டிற்க்கு வந்துள்ளார். அன்று இரவு இருவருக்கு மீண்டும் சண்டை வந்துள்ளது. இதானல் ஆத்திரம் அடைந்த நடராஜன் பிரியாவை அருகில் இருந்த் கத்தியால் பிரியாவில் கழுத்து அழுத்துள்ளார். இதில் பிரியா துடிதுடித்து இறந்துள்ளார். காலை அக்கபக்கதினர் நடராஜன் ஒரு மார்கமாக் இருப்பதை கண்ட பொதுமக்கள் காவல்,துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலிசார் பிரியாவின் உடலை கைப்பற்றி நடராஜனை கைது செய்தனர். மேலும் பிரியாவின் உடலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதை தொடர்ந்து கணவர் நடராஜன் பிரியாவை கொலை செய்தது ஒப்புகொண்டதால் அவரை போலிசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவரும் தற்போது கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்துயுள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.