ETV Bharat / state

கன்னட சினிமா பாணியில் கொள்ளை சம்பவம்: விரட்டிப்பிடித்த தமிழ்நாடு காவல் துறை! - ஓசூர் கொள்ளை சம்பவம்

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே சினிமா பாணியில் வீட்டிலிருந்த பெண்ணைத் தாக்கி தங்கநகையை கொள்ளையடித்த குற்றவாளிகளைக் காவல் துறையினர் அதிரடியாக கைதுசெய்தனர்.

கொள்ளைச் சம்பவம்
கொள்ளைச் சம்பவம்
author img

By

Published : Sep 11, 2020, 7:30 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி சின்ன எலசகிரி, வேலு நகரில் வசிப்பவர் பார்த்திபன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.

செப்டம்பர் 2ஆம் தேதியன்று பார்த்திபன் வேலைக்குச் சென்றநிலையில், வீட்டில் அவரது மனைவி சர்மிளா, மகன்களுடன் பக்கத்து வீட்டுப்பெண் பூமிகா ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில், ஐந்து பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்து கத்தியைக் காண்பித்து சர்மிளா, பூமிகாவைத் தாக்கி தாலிச்செயின், கம்மல் என 8.5 பவுன் தங்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக சர்மிளா ஒசூர் சிப்காட் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து சிப்காட் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட அன்று பக்கத்து வீட்டுப்பெண்ணான பூமிகாவிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

பூமிகாவின் காதிலிருந்த ஒரு பக்க கம்மலை கொள்ளையர்கள் பறித்துச்சென்றதாக அவர் அளித்த வாக்குமூலம் காவல் துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஒட்டுமொத்த காவல் துறையினரின் கவனமும் பூமிகா பக்கம் திரும்பியது. பூமிகா அளித்த வாக்குமூலம் கன்னட சினிமாவான 'தண்டுபாள்யா'வை நினைவுபடுத்தியதாகக் காவல்துறையினர் கூறினர்.

அந்தத் திரைப்படத்தில், வீட்டில் பெண்கள் மட்டும் இருப்பதை அறிந்து கொள்ளைக்கும்பலில் உள்ள பெண் ஒருவர் தண்ணீர் கேட்பதாக உள்ளே நுழைந்ததும், பின்னாடியே கொள்ளைக்கும்பல் சென்று மனிதாபிமானமின்றி பெண்களிடம் நகைகளைப் பறித்து கத்தியால் கழுத்தறுத்து கொலைசெய்து தப்பிவிடுவது போல் அமைந்திருக்கும்.

அதுபோலவே, சின்ன எலசகிரி வேலு நகரில் உள்ள சர்மிளா குடும்பத்தாரை பக்கத்து வீட்டிலிருந்த கொள்ளைக்கும்பலின் தலைவி பூமிகா நீண்ட நாள்களாக நோட்டமிட்டு சம்பவத்தன்று மதியம் சுடிதார் கிழிந்துவிட்டதாகவும், அதனைத் தைத்து தருமாறும் சர்மிளா வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

பின்னர் வீட்டில் பிள்ளைகள், சர்மிளா மட்டுமே உள்ளதையறிந்து பெங்களூருவைச் சேர்ந்த தனது கொள்ளைக் கும்பலுக்குத் தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து, அதிரடியாக நுழைந்த கொள்ளையர்கள் பூமிகா மீது சந்தேகம் வரக்கூடாதென்பதற்காக அவரையும் தாக்கி, சர்மிளாவின் காதில் இருந்த கம்மலை அவர் கழட்டுவதற்கு முன்பாகவே வேகமாக கொள்ளைக்கும்பல் இழுத்ததில் அவரது காதுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் கத்தியால் பிள்ளைகளை மிரட்டி 8.5 சவரன் தங்கநகைகளைப் பறித்துச்சென்றதாக அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளனர்.

முதற்கட்டமாக பூமிகா, பிரசாந்த் ஆகியோரைக் கைதுசெய்த சிப்காட் காவல் துறையினர் மேலும் சஞ்சய் (25), புட்டராஜு (25), கிரண் (25), நாகராஜ் (23) ஆகிய நான்கு கொள்ளையர்களை கர்நாடக மாநிலத்திற்குள் சென்று அதிரடியாக கைதுசெய்தனர்.

ஆறு பேரை கைதுசெய்த சிப்காட் காவல் துறையினர் அவர்களிடமிருந்து தங்கநகைகளைப் பறிமுதல்செய்து இவர்கள் மீது மற்ற மாநிலங்களில் அல்லது தமிழ்நாட்டு காவல் நிலையங்களில் புகார்கள் பதிவாகி உள்ளனவா எனவும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.