நேற்றிரவு சென்னையிலிருந்து ஓசூர் நோக்கி புறப்பட்ட அரசு விரைவுப் பேருந்து ஓசூர் பணிமனையை காலை 5 மணியளவில் அடைந்துள்ளது. ஆனால், பணிமனையில் பேருந்தை நிறுத்த இடமில்லாததால் பணியிலிருந்த அலுவலர் வாசலருகே நிறுத்தச் சொல்லியுள்ளார்.
அங்கும் மூன்று பேருந்துகள் நின்றிருந்ததால் பேருந்தை சாலையோரம் நிறுத்த வெளியில் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பெட்ரோல் பங்கினுள் தறிகெட்டு நுழைந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் இடித்துத்தள்ளி கண்டெய்னர் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த விபத்து பிரேக் ஃபெயிலியரால் ஏற்பட்டிருக்கும் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'அயன்' பட பாணியில் தங்கம் கடத்தல் , ஒருவர் கைது