கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தமிழ்நாடு மாநில எல்லையில் உள்ள பாலிகனப்பள்ளி கிராமத்தில், சுமார் 50 கி.மீ பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியிலிருந்து 500 மீட்டர் அருகில் கர்நாடக மாநில எல்லை தொடங்குகிறது. இந்நிலையில், பாலிகானப்பள்ளி ஏரியில் குடிமராமத்துப் பணி எனக்கூறி இரண்டு ஜேசிபி வாகனங்கள் மூலம் இரவு, பகலாக மண் அள்ளப்பட்டு வருகிறது.
ஏரிக்கரை, விளைநிலங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்கிற நிலையில் இருந்த மண்ணானது, கர்நாடக மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது. மேலும், மண்ணானது அதிக ஆழத்தில் அள்ளப்படுவதால் நிலத்தடி நீா்மட்டம் குறைகிறது, இதனால் ஆடு,மாடு போன்ற கால்நடைகள் குடிநீா் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
இதையும் படிங்க: சேலம் மாநகரத்தை குழந்தைகள் நேய மாநகரமாக மாற்ற முயற்சி!