கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் கரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகமும் நகராட்சியும் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தின.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பயணிகளுக்கு கைகழுவுதல், முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்தல் ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துக் கழக கோட்டப் பொறியாளர் அரவிந்தன், துணை மேலாளர் மோகன்குமார், கிருஷ்ணகிரி கிளை மேலாளர் இளங்கோவன், நகராட்சி ஆணையர் சந்திரா, ஆய்வாளர் மோகனசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'டாஸ்மாக்கை மூடினால் கரோனாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்' - உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்