கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தளபதி நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்துவருகின்றனர். ஊரடங்கு உத்தரவால், வேலையிழந்து உணவின்றி தவிக்கும் அப்பகுதி மக்களுக்கு, உதவ போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர், தன்னார்வலர் கந்தசாமி தாமாக முன்வந்தார்.
உணவின் தேவை மிகுந்திருப்பவர்களைக் கண்டறிந்து, சொந்த செலவில் உணவு பொட்டலங்களை வழங்கினார். அதேபோல், மிட்டப்பள்ளி, வசந்தபுரம், பரசுராமன்கொட்டாய் ஆகிய பகுதிகளிலுள்ள 500 நபர்களுக்கு முட்டையுடன் கூடிய உணவு பொட்டலங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், திமுக மாவட்ட துணைச்செயலாளர் சந்திரன், மிட்டப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவி சின்னத்தாய், மூன்றம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன், பாஜக நிர்வாகிகள் ஜெயராமன், ஒன்றிய தலைவர் சிவா, தன்னார்வலர்கள் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கோழிப் பண்ணைகளை காக்க நடவடிக்கை - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்