கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது பேத்தி, ஒன்றுவிட்ட மகன், மகள், உறவினர் ஆகிய நான்கு பேருக்கு கரோனா தொற்று ஓசூர் மாநகராட்சியில் செயல்படும் மத்திய அரசின் ஜுனோட்டிக்ஸ் ஆய்வகம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாதித்த பாட்டியின் பேத்திக்கு வயது 12 என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட அனைவருமே கரோனா தொற்றின் அறிகுறி ஏதும் இல்லாத கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 4 பெண்கள், 1 சிறுமி, 3 ஆண்கள் என 8 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூளகிரி பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனா தொற்று ஏற்பட்ட கிராமத்தில் உடனடியாக இரண்டிலிருந்து நான்கு பேருக்கு கரோனா வைரஸ் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருவாரூரில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி