கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே செட்டிபள்ளியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவந்ததோடு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி உடல் முடக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்தவாறே சிகிச்சைப் பெற்றுவந்துள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மருத்துவம் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
மேலும் அதே பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட, ஒரு முதியவர் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேனியில் 11 பேருக்கு கரோனா உறுதி!