கிருஷ்ணகிரி மாவட்டம், பேரண்டப்பள்ளி அருகே உள்ள அனாசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர், வெங்கடேஷ். தனது இரண்டு ஏக்கர் தோட்டத்தில் பட்டன் ரோஸ் சாகுபடி செய்து வருகிறார். அந்தப் பூக்கள் அனைத்தையும் சுழற்சி முறையில் பறித்து, கிட்டத்தட்ட 20 லட்ச ரூபாய் அளவுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏற்றுமதி செய்து வருகிறார்,வெங்கடேஷ். பொதுவாக பூ வியாபாரம், கோடை காலத்தில் கோயில் திருவிழா மற்றும் சுபகாரியங்கள் காரணமாக சூடு பிடிக்கும்.
ஆனால், இம்முறை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பூக்களை விற்க முடியாமல் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பூ வியாபாரம் பாதிக்கப்பட்டதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேஷ், பூக்களை சாலையோரம் கொட்டிச் சென்றுள்ளார். சாலையோரம் பூக்கள் இருந்ததால், அதை அப்பகுதி மக்கள், இலவசமாக தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் இது தொடர்பாக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெங்கடேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் முதல் கரோனா: தனிமைப்படுத்தப்பட்ட எட்டு பேர்