கிருஷ்ணகிரி தவிர தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், ஓசூரில் தற்போது ஒரு நபர் பாதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 34 நாட்கள் கழித்து, நபர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டிடாத நிலையில், இன்று வெளியாகியுள்ள இத்தகவல் அம்மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வாட்ஸ்அப் வழியாக இத்தகவல் வெளியாகிய நிலையில், ஈடிவி பாரத் ஊடகத்தின் சார்பாக மாவட்ட மருத்துவ நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, சென்னையில் உள்ள கிங்ஸ் நிறுவனத்திற்கு, நோயாளியின் எதிர் பாலிமரேஸ் செயின் ரியாக்சன் (ஆர்ட்டி.பிசிஆர்) முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது என்றும், நாளை தான் இறுதி முடிவு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.