கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உளிபண்டா வனப்பகுதியில் வன ஊழியர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானை ஒன்று சடலமாக கிடப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று யானையை பரிசோதனை செய்தனர். அதில் யானை 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை பாறையிலிருந்து வழுக்கி விழுந்ததில் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் யானையை உடற்கூறாய்வு செய்து புதைத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, யானை உணவு தேடிச் சென்றபோது, பாறையின் ஓரப்பகுதியில் கால் வைத்ததில் பாறையில் இருந்து வழுக்கி கீழே விழுந்து பலத்த அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர்.