ETV Bharat / state

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை! - வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ராஜசேகர்

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அருகே வெட்டுக்கிளிகள் படையெடுத்ததையடுத்தை நேரில் சென்று பார்வையிட்ட அலுவலர்கள், இவ்வகை வெட்டுக்கிளிகளால் விவசாய பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்தனர்.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை

author img

By

Published : May 30, 2020, 3:56 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியை அடுத்த நேரலகிரி கிராமத்தில் நேற்று (மே 29) மாலை நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்தன. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ராஜசேகர், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் மோகன், பையூர் ஆராய்ச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வன், வேளாண் அறிவியல் மைய தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.

ஆய்வுக்குப் பின் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ராஜசேகர் கூறியதாவது, “இந்த மாதிரியான வெட்டுக்கிளிகளால் விவசாய பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்தவகை வெட்டுக்கிளிகள் கோடை காலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் இயல்பாக காணப்படும்.

இந்த வகை வெட்டுக்கிளிகள் எருக்கஞ்செடி போன்ற பால் சுரக்கும் செடிகளில் மட்டுமே இருக்கும். இவை விவசாயப் பயிர்களை தாக்காது. மேலும் வடமாநிலங்களில் பயிர்களைத் தாக்கக் கூடிய பாலைவன வெட்டுக்கிளிகள் இவை கிடையாது. இந்த வகை வெட்டுக்கிளிகளை, சாதாரணமாக தண்ணீரில் வேப்ப எண்ணெயை கலந்து தெளித்தால் இந்த வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தி விடலாம்” எனத் தெரிவித்தார்.

இது குறித்து, வேளாண் பூச்சியியல் துறை வல்லுநர் திலகம் கூறியதாவது, “இந்த வகை வெட்டுக்கிளிகள் நம்ம ஊரில் வாழும் சாதாரண போகில்லோசிரஸ் பிக்டஸ் (Poekilocerus pictus) வகை வெட்டுக்கிளிகள். இவை பிர்கோ மார்பிடை குடும்பத்தில் (Pyrgomorphidae)
ஆர்த்தோபெட்ரா (Orthoptera) வரிசையைச் சார்ந்தவை.

இவற்றால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மேலும், விவசாயிகள் எந்தவித அச்சமுமின்றி தொடர்ந்து தங்கள் விவசாய நிலங்களில் பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம். இது குறித்து, கூடுதல் விவரங்கள் தெரிந்துக்கொள்ள பையூரில் அமைந்துள்ள வட்டார வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

இதையும் படிங்க: விவசாய நிலங்களில் ஈக்கள் போல் மொய்த்த 'பாலைவன வெட்டுக்கிளிகள்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.