ETV Bharat / state

’மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்’ - பொன்குமார் நம்பிக்கை!

கிருஷ்ணகிரி: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் தலைவர் பொன் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொன் குமார்
author img

By

Published : Mar 24, 2019, 5:15 PM IST

Updated : Mar 24, 2019, 7:07 PM IST

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் தலைவர் பொன் குமார் வாக்கு சேகரித்தார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். தேர்தலில் மதச்சார்பின்மையை பாதுகாப்பதை விட ஜனநாயகத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்றும் கருத்து தெரிவித்தார்.

மேலும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் தாயை கூடுவதற்கு சமம் என்று கூறிய ராமதாஸ் தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் எடுத்துள்ள முடிவு அவருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிலுள்ள இரண்டரை கோடி வன்னியர்கள் மீதும் விழுந்த நீக்க முடியாத கறை என்று சாடினார்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் அவர்கள் பொன்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

Body:
மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தற்போது நடக்கும் மக்களவைத் தேர்தல் இறுதி தேர்தல் என்றவாறு சட்டத்தை மோடி மாற்றி அமைத்து விடுவார் என்று காரசாரமான தமிழ்நாடு விவசாய கட்சி தலைவர் பொன் குமார் அவர்கள் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி.

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய கட்சி தொழிலாளர் தலைவர் பொன் குமார் அவர்கள் பேட்டியளித்தார்.தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரிக்கும் பணிக்கு வந்த தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் தலைவர் பொன் குமார் 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் அதற்கு உறுதுணையாக தமிழ்நாடு தொழிலாளர் நல கட்சி களப்பணி ஆற்றி வருகிறது என்று குறிப்பிட்டார்.
இந்தத் தேர்தலில் மதச்சார்பின்மையை பாதுகாப்பதை விட ஜனநாயகத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி அமைத்து இறுதி தேர்தலாக இந்த தேர்தல் மட்டுமே மக்களவைத் தேர்தல் ஆக இருக்கும் என்று அவர் கூறினார்.

தற்பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் கூட்டணி என்பது ஒரு பொருந்தாக் கூட்டணி என்றார் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் தாயை புணர்வதற்கு சமம் என்று கூறிய ராமதாஸ் தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தற்பொழுது எடுத்துள்ள முடிவு பாமக நிறுவனர் ராமதாசை பொறுத்தளவில் பாமக அவருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிலுள்ள இருக்கும் இரண்டரை கோடி வன்னியர்கள் மீது விழுந்த நீக்கமுடியாத கறை என்றார்.
இத்தகைய முடிவை எடுத்திருப்பதால் வன்னியர்கள் மக்களிடம் நம்பகத்தன்மையை ராமதாஸ் கேள்விக்குறியாக்கி உள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி என்பது வன்னியர்கள் கட்சி என்ற நிலையிலிருந்து தற்போது மாறுபட்டுவிட்டது என்றார் இத்தகைய பேரம்பேசும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் பேசினார். அதிமுக தலைமையில் உள்ள கூட்டணியை கண்டிப்பாக ஒரு தோற்கடிக்கப்பட வேண்டிய கூட்டணி என்ற அவர் பேசினார் திமுக தலைமையிலான கூட்டணி 40 பாராளுமன்ற தொகுதி மற்றும் இடைத்தேர்தலில் 18 சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று மத்தியில் மற்றும் மாநிலத்தில் நிச்சயமாக ஆட்சியை பிடிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Conclusion:தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன் குமார் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விபரம் செய்தி ஆக்கப்பட்டது
Last Updated : Mar 24, 2019, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.