கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி குன்னத்தூர் ரோட்டில் ரிஷ்வான் பாஷா என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் தீபாவளி பண்டிகைக்காக ரூ. 15 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இன்று (அக. 23) காலை எட்டு மணியளவில் பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த பட்டாசுகள் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக வெடித்து சிதறியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே கடையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெடி விபத்தில் கடையின் உரிமையாளரின் உறவுக்கார பெண் உயிரிழந்தார். மேலும் அவரது குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண்கள், ஆண் ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடலூர் அருகே வெடி விபத்து: 9 பேர் பலி