கிருஷ்ணகிரி அருகே காலில் அடிப்பட்ட நிலையில் காட்டுயானை ஒன்று கிராமப் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளது. கடந்த 20 நாள்களுக்கு முன் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள தண்ணீர் இல்லா 30 அடி கிணற்றில் ஆண் காட்டு யானை ஒன்று தவறி விழுந்தது. இதைக் கண்ட மற்ற காட்டு யானைகள் யானையை மீட்க முயற்சி செய்தது. பின்னர் வனத்துறையினர் பள்ளம் வெட்டி யானையை மீட்டனர்.
தற்போது அந்த யானை பின்பக்க இடது காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை அருகே துடுகனஹள்ளி கிராமத்திலுள்ள மாந்தோட்டத்தில தஞ்சம் அடைந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் யானைக்கு தண்ணீர் குடிக்க வசதி செய்து அதற்கு உணவு அளித்தனர். இதைத் தொடர்ந்து, அரசு கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக்குழு யானைக்கு ஊசி செலுத்தி சிகிச்சையளித்தனர். இதனிடையே, யானை இருப்பதை அறிந்த கிராம மக்கள் யானையைப் பார்க்க வந்தனர். ஆனால் காவல் துறையினர் கூட்டத்தைக் கலைத்து போகச் செய்தனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது.
இதையும் படிங்க: நாடெங்கிலும் ஒற்றுமை தீப ஒளியை ஏற்றிய மக்கள்!