ETV Bharat / state

விவசாயியிடம் கையூட்டு வாங்கிய மின்வாரிய அலுவலர் கைது! - கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே இலவச மின்சார இணைப்புப் பெற விண்ணப்பித்த விவசாயியிடம், 10 ஆயிரம் ரூபாய் கையூட்டு வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

கையூட்டு வாங்கிய மின்வாரிய அலுவலர் கைது
கையூட்டு வாங்கிய மின்வாரிய அலுவலர் கைது
author img

By

Published : Oct 7, 2020, 4:55 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன். இவர் கெலமங்கலம் மின்சார வாரிய அலுவலகத்தில், இலவச மின்சார இணைப்புப் பெற கடந்த 2001 ஆம் ஆண்டு விண்ணப்பம் செய்துள்ளார். இதனையடுத்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது அவருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க ஆணை வந்துள்ளது.

இதனை விசாரித்த மின்வாரிய இளநிலை பொறியாளர் தென்னரசி என்பவர் விவசாயி வெங்கடேசனிடம் இலவச மின்சார இணைப்பு வழங்க 30 ஆயிரம் ரூபாய் கையூட்டு வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை விரும்பாத விவசாயி வெங்கடேசன் இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் மாவட்ட ஊழல் தடுப்புத் துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜன், ஆய்வாளர் முருகன் ஆகியோர் 10 ஆயிரம் ரூபாயை விவசாயி வெங்கடேசனிடம் கொடுத்து, இளநிலை பொறியாளர் தென்னரசியிடம் முன் பணமாக கொடுக்க வைத்துள்ளனர். பின்னர், விவசாயிடமிருந்து தென்னரசி பணத்தை கையூட்டாக பெற்றுக்கொண்டார்.

கைது செய்யப்பட்ட மின்வாரிய அலுவலர்

அப்போது, மறைந்திருந்த ஊழல் தடுப்புத் துறை அலுவலர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அலுவலர்கள் தென்னரசியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வீடியோ: உடுமலைப்பேட்டை மருத்துவமனையில் உடற்கூராய்விற்கு லஞ்சம் பெற்ற ஊழியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.