ETV Bharat / state

' பட்டியலினத்தைச் சேர்ந்த நீ, பொதுத் தொகுதியில் போட்டியிடலாமா? ' - மிரட்டிய தேர்தல் அலுவலர்

கிருஷ்ணகிரி: பொதுத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் வேட்பு மனுவைத் தேர்தல் அலுவலர் நிராகரித்துள்ளார். ஆளுங்கட்சியினர் மிரட்டி தனக்கு முன்மொழிந்தவரை மறுக்க வைத்ததாக வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.

Electoral officer who rejected the ammk canditate  nomination by the intervention of the ruling admk party

author img

By

Published : Dec 20, 2019, 9:19 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த சூளகிரியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் எல்லப்பா. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அத்திமுகம் பகுதி ஐந்தாம் வார்டில் (பொது வார்டு) அமமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எல்லப்பா வேறொரு ஊராட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அத்திமுகம் ஊராட்சியைச் சேர்ந்த ரகு என்பவர், அவருக்கு முன்மொழிந்து வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

வேட்புமனுக்கள் மீதான ஆய்வின்போது ரகு, எல்லப்பாவின் வேட்புமனுவை முன்மொழிவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அமமுகவிற்கு சின்னம் ஒதுக்கப்படும் என்று நண்பகல் வரை எல்லப்பா காத்திருந்த வேளையில், திடீரென அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் பாலாஜி கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த எல்லப்பா, தேர்தல் அலுவலரிடம் முறையிட்டபோது, ' பட்டியலினத்தைச் சேர்ந்த நீ, உங்களுக்கான இடங்களில் போட்டியிடாமல் பெரியவர்களை எதிர்த்துப் பொதுத் தொகுதியில் போட்டியிடலாமா' என்று ஒருமையில் பேசியுள்ளார். மேலும் முன்மொழிந்த ரகுவும் மறுப்புக் கடிதம் வழங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் அதிமுகவினர் தலையிடல் இருப்பதாக அறிந்த எல்லப்பா, அமமுக நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனுவை ஏற்குமாறு அலுவலரிடம் முறையிட்டுள்ளார். இதில் அதிர்ச்சி திருப்பமாக, காலை முதல் எல்லப்பாவுக்கு முன்மொழிந்த ரகு, ஆளுங்கட்சியினருடன் நேரில் வந்து, அவரை யாரென்றே தெரியாதென குண்டைப் போட்டுள்ளார்.

இதையடுத்து ரகுவுடன் அமமுகவினர் பேசியபோது, அவர்களைத் தடுத்த அதிமுகவினர், அவரை அலுவலரிடம்‌ வாக்குமூலம் அளிக்க வைக்க அழைத்துச் சென்றனர். முடிவில், எல்லப்பாவின் வேட்பு மனு கடைசி வரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்குக் காரணமாக முன்மொழிந்தவர் மறுப்பு கடிதம் வழங்கியதாலேயே வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். எல்லப்பாவை சாதி ரீதியில் தரக்குறைவாகப் பேசி ஆளுங்கட்சியினருடன் துணை நின்ற தேர்தல் அலுவலர் பாலாஜி மீது சட்டப்படி வழக்குத் தொடரவிருப்பதாக அமமுகவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அலுவலரிடம் முறையிடும் எல்லப்பா

சூளகிரி ஊராட்சி ஒன்றியம் ஐந்தாவது வார்டில், சூளகிரியின் முன்னாள் ஒன்றியக்குழு தலைவரும் 2016ஆம் ஆண்டு வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஹேம்நாத் என்பவரின் மனைவி லாவண்யா உள்பட ஏழு பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

பின்னர், திமுக உட்பட ஐந்து பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுவிட்ட நிலையில், அமமுக வேட்பாளரின் வேட்புமனு இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எல்லப்பாவின் மனுவும் நிராகரிக்கப்பட்டதால் லாவண்யா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: போலி கையெழுத்திட்டு வேட்பு மனுவை வாபஸ் வாங்கிய அடையாளம் தெரியாத நபரால் பரபரப்பு!

Intro:ஓசூர் அடுத்த சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிட்ட அமமுக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு: பட்டியலின சமூகத்தவர் பொது தொகுதியில் போட்டியிட்டதால் ஆளுங்கட்சியினரின் மிரட்டலால் முன்மொழிந்தவரே இறுதியில் முன்மொழிவை மறுத்துவிட்டதாக வேட்பாளர் புகார்.Body:ஓசூர் அடுத்த சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிட்ட அமமுக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு: பட்டியலின சமூகத்தவர் பொது தொகுதியில் போட்டியிட்டதால் ஆளுங்கட்சியினரின் மிரட்டலால் முன்மொழிந்தவரே இறுதியில் முன்மொழிவை மறுத்துவிட்டதாக வேட்பாளர் புகார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளராக இருப்பவர் எல்லப்பா பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அத்திமுகம் பகுதி 5 ஆம் வார்டில் (பொது) அமமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார், எல்லப்பா வேரொறு ஊராட்சியை சேர்ந்தவர் என்பதால் அத்திமுகம் ஊராட்சியை சேர்ந்த ரகு என்பவர் முன்மொழிந்து வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

வேட்புமனுக்கள் மீதான ஆய்வின்போது வேட்பாளருடன் வந்த ரகு எல்லப்பா வேட்புமனுவை முன்மொழிவதாக அறிவித்துள்ளார்,

அமமுகவிற்கு சின்னம் ஒதுக்கப்படும் என்கிற நிலையில், நண்பகல் வரை எல்லப்பா காத்திருந்தபோது திடீரென அவரின் வேட்புமனு நிராகரித்ததாக கூறியுள்ளார் தேர்தல் அதிகாரி பாலாஜி. அதிர்ச்சியடைந்த எல்லப்பா, தேர்தல் அதிகாரி பாலாஜியிடம் கேட்டபோது பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த நீ உங்களுக்கான இடங்களில் போட்டியிடாமல், பெரியவர்களை எதிர்த்து பொது தொகுதியில் போட்டியிடலாமா என்று ஒருமையில் பேசியதும் மேலும், முன்மொழிந்தவரே மறுப்பு கடிதம் வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவினர் தலையிடல் இருப்பதாக அறிந்த எல்லப்பா அமமுக நிர்வாகிகளுடன் வேட்புமனுவை ஏற்குமாறு அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர்.

காலை முதல் தொடர்பில் இல்லாத வேட்பாளரை முன்மொழிந்த ரகு ஆளுங்கட்சியினருடன் நேரில் வந்து வேட்பாளர் யாரென்றே தெரியாதென குண்டை போட்டுள்ளார்.

அவரிடன் அமமுகவினர் பேசியபோது தடுத்த அதிமுகவினர், அந்த இளைஞரை அதிகாரியிடம்‌ வாக்குமூலம் அளிக்க வைத்து அழைத்து சென்றனர்.

சூளகிரி ஊராட்சி ஒன்றியம் 5 வார்டில் போட்டியிட்டுள்ள அதிமுக வேட்பாளர் சூளகிரியின் முன்னாள் ஒன்றியகுழு தலைவரும், 2016 ஆம் ஆண்டு வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஹேம்நாத் என்பவரின் மனைவி லாவண்யா, இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சைகள் உட்பட 7 பேரில் திமுக உட்பட 5 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுவிட்ட நிலையில் அமமுக வேட்பாளரின் மனு இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக வேட்பாளர் லாவண்யா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரி சாதி ரீதியாக பேசி, ஆளுங்கட்சியினருடன் துணை நின்ற பாலாஜி என்கிற தேர்தல் அதிகாரி மீது சட்டப்படி வழக்கு தொடர இருப்பதாக அமமுகவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தேர்தல் நடத்தும் உதவி ஆய்வாளரிடம் கேட்டபொழுது, முன்மொழிந்தவர் மறுப்பு கடிதம் வழங்கப்பட்டதாலேயே மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.