ETV Bharat / state

வாக்கு சாவடி மையங்களை ஆய்வு செய்த ஆட்சியர்!

கிருஷ்ணகிரி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கை பணிகளையும், வாக்கு சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

வாக்கு சாவடி மையங்கள்
author img

By

Published : Mar 14, 2019, 11:00 PM IST

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் 2019- யொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி

சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட

வாக்கு சாவடி மையங்களையும்,

திப்பனப்பள்ளி மாதிரி பள்ளி அருகே நெடுஞ்சாலை பகுதியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கை

மேற்கொள்ளும் பணிகளையும், சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணிகளையும், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ்.பிரபாகர் இன்றுநேரில்

பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக கோடிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி

மையத்தில் மின்சார வசதி, விளக்கு, மின்விசிறி வசதிகள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்கு

சாவடிக்குள் சென்று வாக்களிக்க சாய்வு தளம், கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகளை

பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கை பிடி மற்றும் தரை

தளங்களை சீரமைக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து வேப்பனப்பள்ளி

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு

மேற்கொண்டார்.

மேலும் திப்பனப்பள்ளி மாதிரி பள்ளி அருகே பறக்கும் படையினர் வாகனத்தை

தணிக்கை மேற்கொள்ளும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வேப்பனப்பள்ளி அருகே

நெடுஞ்சாலையொட்டி கல்வெட்டில் கட்சி விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்

தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல்
பறக்கும் படையினர் வாகன தணிக்கை பணிகளையும், வாக்கு சாவடி மையங்களை மாவட்ட தேர்தல்
அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் 
நேரில் பார்வையிட்டு ஆய்வு:
வாக்கு சாவடிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் - வட்டார வளர்ச்சி
அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவு.

 நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் 2019- யொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி
சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குந்தராப்பள்ளி, கோடிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும்
வேப்பனஹள்ளிஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையங்களையும்,
திப்பனப்பள்ளி மாதிரி பள்ளி அருகே நெடுஞ்சாலை பகுதியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கை
மேற்கொள்ளும் பணிகளையும், சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணிகளையும், மாவட்ட தேர்தல் அலுவலர்
மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ்.பிரபாகர் இ.ஆ.ப. அவர்கள் இன்றுநேரில்
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக கோடிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி
மையத்தில் மின்சார வசதி, விளக்கு, மின்விசிறி வசதிகள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்கு
சாவடிக்குள் சென்று வாக்களிக்க சாய்வு தளம், கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகளை
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கை பிடி மற்றும் தரை
தளங்களை சீரமைக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து வேப்பனப்பள்ளி
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார். மேலும் திப்பனப்பள்ளி மாதிரி பள்ளி அருகே பறக்கும் படையினர் வாகனத்தை
தணிக்கை மேற்கொள்ளும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வேப்பனப்பள்ளி அருகே
நெடுஞ்சாலையொட்டி கல்வெட்டில் கட்சி விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்
தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.