கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர், மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர், இணைத் தலைவர் ஆகியோர் தலைமையில் இன்று கண்காணிப்புக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டம், வீட்டு வசதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், கிருஷி சின்சாயி யோஜனா, பயிர்க் காப்பீட்டுத் திட்டம், உஜ்வாலா யோஜனா, சுரக்ஷா பீமா யோஜனா, ஜீவன் ஜோதி யோஜனா, ஜன் தன் யோஜனா ஆகிய மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விரிவாகக் கலந்தாய்வுசெய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்து கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார், மாவட்ட ஆட்சியர் பிரபாகர், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இருவரும் கலந்துகொள்ளவில்லை.
இதையும் படிங்க: பல மாவட்டங்களில் திருடிய ஜெய்சங்கர் கைது