ETV Bharat / state

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்.. ஓசூரில் விநோத திருவிழா! - Kanakadasa

ஓசூரில் கனகதாசர் ஜெயந்தி விழாவில் தலையில் தேங்காய்கள் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஓசூரில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

author img

By

Published : Dec 26, 2022, 10:09 AM IST

Updated : Dec 26, 2022, 10:21 AM IST

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத திருவிழா

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் கனகதாச சேவா சமிதி டிரஸ்ட் சார்பில் கனகதாசரின் 535-ஆவது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக குறும்பர் சமூக மக்கள் தங்களது குல தெய்வங்களான ஸ்ரீ சிக்கம்ம சிவலிங்கேஸ்வரி தேவி, ஸ்ரீ தொட்டம்மா ஜெகதீஸ்வரி தேவி, ஸ்ரீ லிங்கேஸ்வர ஸ்வாமி, ஸ்ரீ சிக்க வீரம்மாதேவி, பீரேஸ்வர ஸ்வாமி உள்ளிட்ட தெய்வங்களைத் தலை மேல் சுமந்தபடி கலாச்சார கலை நிகழ்ச்சிகளாகிய டொள்ளு குனித, வீரகாசே, வீரபத்திர குனித, கம்சாளே, ஆகிய நடனங்களுடன் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.

தொடர்ந்து பேருந்து நிலைய பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சுவாமிகளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தலைமேல் தேங்காய்கள் உடைக்கும் விநோத திருவிழா நடத்தப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் 1,008 தேங்காய்களைத் தலைமேல் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி கொண்டனர்.

இந்த திருவிழாவில் தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதி கிராம பொதுமக்கள் மட்டுமின்றி ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் குறும்பர் இன மக்கள் கலந்து கொண்டனர். கனகதாசர் ஜெயந்தியை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்திலிருந்து முக்கிய சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான குறும்பர் இன மக்கள் கலந்து கொண்டனர். மேலும் கனகதாசர் ஜெயந்தியை முன்னிட்டு ரத்த தானம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: தீப மலை உச்சியில் அண்ணாமலையார் பாத பரிகார பூஜை

Last Updated : Dec 26, 2022, 10:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.