மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சுகுமார், சுஷாந்தி தம்பதி. இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் வேலை செய்துவருகின்றனர்.
ஆறு மாத கர்ப்பிணியான சுஷாந்தி, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சுஷாந்தியின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் ஒட்டிய நிலையில் இருப்பதை அறிந்தனர்.
மேலும் தாமதித்தால் தாய், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை வெளியில் எடுத்தனர். ஆனால் இரட்டை குழந்தைகள் பிறந்த சிறிது நேரத்தில் உயிரிழந்தன.
இதையும் படிங்க: 108 ஆம்புலன்ஸ் வர தாமதம்: குழந்தை உயிரிழப்பு